சின்ன வயசில் பிரவின் அப்படிதான். ஒரு நாள், மழை வரும்போல இருந்ததால், களத்தில் கடலை கூடிகொண்டிருந்தோம் எல்லோரும். அப்போ, எங்கள் காட்டில் வேலைசெய்பவர் (பொவீலை - புகையிலை) வந்து பேசிகொண்டிருந்தார். கொஞ்சம் நேரம் காணாமல் போயிருந்த பிரவின், ஒரு சேரை வீட்டிலிருந்து இழுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தது. சேரை வேப்பமரத்தடியில் போட்டு "தாத்தா உட்கார், உட்கார்-ன்னு" ஒரே கண்டிப்பு. 75 வயதான பொவீலை, பேருந்து தவிர எங்காவது நாற்காலியில் உட்கார்ந்து இருப்ப்பரான்னு தெரியாது. அவர் பிரவினிடம் மண்டிப்போட்டு கொஞ்சியதில் ஒரு புலிட்சர் பரிசு வாங்கிய பெருமிதம், சந்தோசம்.
நேற்று மாலதி மித்துவுக்கு ஒரு சின்ன டம்ளரில் பால் ஊத்தி தந்தாள். உடனே, கீழே காட்டி காட்டி சிட்டவுன் சொன்னது. டம்ளரை கீழே வைக்கவேணுமாம்.